/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லாமே ஒரு கணக்கு தான்: தந்தை வழியில் தனயன்
/
எல்லாமே ஒரு கணக்கு தான்: தந்தை வழியில் தனயன்
ADDED : டிச 09, 2025 03:58 AM
செ ஞ்சியில் கடந்த 5ம் தேதி துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற செஞ்சி தொகுதி தி.மு.க.,வினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., துணை முதல்வர் உதயநிதியிடம் வெள்ளி செங்கோலை பரிசாக வழங்கினார்.
தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா வெள்ளி வாள் வழங்கினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் கட்சி நிதியாக 5 லட்சம் ரூபாய், இளைஞரணி நிதியாக 5 லட்சம் ரூபாய் என 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த சம்பவம் சிலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி தலைவர் கருணாநிதி திருவண்ணாமலை செல்லும் வழியில் செஞ்சி சந்தை மேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் அப்போதைய விவசாய அணி அமைப்பைச் சேர்ந்த கண்ணன், ஒரு லட்சம் ரூபாயை கட்சி நிதியாக கருணாநிதியிடம் மேடையிலேயே வழங்கினார். இதனால் கருணாநிதியின் கவனத்திற்கு உரிய நபரானதுடன், 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கிடைத்தது.
அதே பாணியில் 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தந்தை தாத்தாவிடம் நிதி கொடுத்ததை போல், கண்ணனின் மகன் ஆனந்த், கருணாநிதியின் பேரனிடம் நிதி கொடுத்து தன்னை முன்னிலைப் படுத்தி கொண்டது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

