தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விவசாயிகளுக்கு வனத்துறை மரக்கன்றுகள் வழங்கல்

விவசாயிகளுக்கு வனத்துறை மரக்கன்றுகள் வழங்கல்

விவசாயிகளுக்கு வனத்துறை மரக்கன்றுகள் வழங்கல்


UPDATED : நவ 04, 2026 12:20 PM

ADDED : நவ 04, 2026 12:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 04, 2026 12:20 PM ADDED : நவ 04, 2026 12:17 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு, வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பயன்தரும் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வனத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வனச்சரக அலுவலர் குப்புசாமி, வனவர் இமயராஜ் உள்ளிட்டோர், விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மரக்கன்றுகளை கண்காட்சியாக வைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மாவட்ட விவசாயிகளுக்கு இத்திட்டத்தில் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. தேக்கு, வேங்கை, இருவடி, மகாகனி, செம்மரம், சந்தனமரம் மற்றும் புங்கன், நாவல், புளி, வேம்பு, நீர்மருது, இலுப்பை போன்ற மரக்கன்றுகள் வழங்க தயாராக உள்ளது. விருப்புமுள்ள விவசாயிகள் 89258 50809, 89258 50811 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு பெறலாம்.

இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us