ADDED : மார் 14, 2024 11:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: உலக மகளிர் தின விழா மாரத்தான் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
ரெட்டணை அரிமா சங்கம் சார்பில், உலக மகளிர் தினத்ததையொட்டி, மகளிருக்கான 8 கி.மீ., மாரத்தான் போட்டி நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதில் ரெட்டணை கென்னடி மெட்ரிக் பள்ளி பிளஸ் 2 மாணவிகள் புவனேஸ்வரி முதலிடம், பிளஸ் 1 மாணவி கோமதி இரண்டாம் இடம், லாவண்யா மூன்றாம் இடம் பிடித்தனர்.
ரெட்டணை ரிவர்ஸ் அரிமா சங்க செயலாளர் குருமூர்த்தி, மாணவிகளை பாராட்டினார். கென்னடி மெட்ரிக் பள்ளி தாளாளர் சண்முகம், செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கவுரவித்தனர்.

