/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
/
வழக்கறிஞர்கள் கோர்ட் புறக்கணிப்பு
ADDED : டிச 02, 2025 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: இ-பைலிங் முறையை ரத்து செய்யக்கோரி, விழுப்புரம் மாவட்ட கோர்ட்டுகளில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இ-பைலிங் முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், ரத்து வேண்டும். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தியபின், இம்முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதுவரை தற்போதைய நடைமுறையே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார் ஆகிய கோர்ட்டுகளில் வழக்கறிஞர்கள் நேற்று புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

