/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்தவர் கைது
/
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்தவர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்தவர் கைது
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரை கொலை செய்தவர் கைது
ADDED : மார் 20, 2024 05:30 AM
மரக்காணம் : கள்ளக்காதல் விவகாரத்தால் நண்பரை அடித்து கொலை செய்து குட்டையில் வீசியவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து மகன் அன்பு, 42; ராகவன் மகன் மணியரசு,30; லாரி டிரைவர்களான இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மணியரசு அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள குட்டையில் வீசப்பட்டிருந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், மணியரசு, தனது நண்பரான அன்புவின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அன்பு, நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிக்க பெருமுக்கல் குட்டைக்கு சென்ற மணியரசனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து, கல்லை கட்டி குட்டையில் வீசியது தெரிய வந்தது.
அதன்பேரில், பிரம்மதேசம் போலீசார், தலைமறைவாக இருந்த அன்புவை நேற்று கைது செய்தனர்.

