ADDED : டிச 07, 2025 05:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: முன்னாள் முதல்வர் ஜெ., நினைவு நாளை முன்னிட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் செஞ்சி சாலையில் முன்னாள் கவுன்சிலர், விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை இணைச் செயலாளர் வடபழனி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அர்ஜூனன் எம்.எல்.ஏ., ஜெ.,படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நகர செயலாளர் ரூபன்ராஜ், மாநில எம்.ஜி.ஆர்.மன்ற துணைத் தலைவர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், அவைத் தலைவர் தீனதயாளன், தளபதி ரவி, தேவ ஏழுமலை, வழக்கறிஞர்கள் கார்த்திக் கருணாகரன், சவுகத்அலிகான், பாசறை கார்த்திக், முன்னாள் கவுன்சிலர் பாலச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

