/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பரிமாறிய மட்டன் பிரியாணி; தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள் 'குஷி'

ADDED : மார் 19, 2024 10:52 PM

திண்டிவனம் : திண்டிவனத்தில் தேர்தல் தொடர்பாக நடந்த தி.மு.க., இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில், சுடச்சுட மட்டன் பிரியாணியை அமைச்சர் பரிமாறினார்.
லோக்சபா தேர்தல் குறித்த தி.மு.க., மண்டலம்-2 இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
திருவள்ளூர்,கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் அமைச்சர் மஸ்தான், இளைஞரணியினர் தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என ஆலோசன வழங்கினார்.
கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகள் அனைவருக்கும் அமைச்சர் மஸ்தான் சுடச்சுட மட்டன் பிரியாணி பரிமாறி, குஷிப்படுத்தினார்.