/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2025 09:05 PM

கண்டமங்கலம்: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய தலைவர் சக்திவேல் வரவேற் றார். மாவட்ட அமைப்பு செயலளார் அருணகிரி, நிர்வா கிகள் சுப்ரமணி, குமார், முருகன், ஒன்றிய தலைவர் சக்திவேல், செயலாளர் புரூஸ்லி, பொரு ளாளர் காந்தி, துணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித் தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கண்டமங்கலம், குமளம் ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக நீண்ட விடுப்பில் இருந்து வந்தவரை பணியில் சேர ஆணை வழங்காமல் அலைகழித்து வரும் அதிகாரிகளை கண்டித்தும், உடன் பணி ஆணை வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

