ADDED : மார் 16, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் அடுத்த சின்னநெற்குணம் கிராமத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு பள்ளிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலைவகித்தனர்.
அமைச்சர் மஸ்தான் பள்ளிக்குத் தேவையான பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் மற்றும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கி பேசினார்.
மாவட்ட அமைப்பாளர் அன்சாரி, விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணியன், ஒன்றிய குழு உறுப்பினர் பரிதா சம்சுதீன், செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

