/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ராஜா தேசிங்கு மெட்ரிக் பள்ளியில் சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி
/
ராஜா தேசிங்கு மெட்ரிக் பள்ளியில் சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி
ராஜா தேசிங்கு மெட்ரிக் பள்ளியில் சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி
ராஜா தேசிங்கு மெட்ரிக் பள்ளியில் சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி
ADDED : டிச 07, 2025 05:19 AM

செஞ்சி: சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் ராஜா தேசிங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்திய நாட்டின் கலாசாரம், பண்பாடு, பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கும் பெண்கள் மட்டும் பங்கேற்ற சப்த சக்தி சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி மாணவர்களின் தாய்மார்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கு தாளாளர் கவுசல்யா தலைமை தாங்கினார். ஆசிரியை சரளா வரவேற்றார். ஆசிரியை சத்யா அறிமுக உரை நிகழ்த்தினார்.
பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் சசிகலா தன்னம்பிக்கை உரையாற்றினார். ஆசிரியைகள் துர்காதேவி, சுடாமணி கருத்துரை வழங்கினர். ஆசிரியை மகேஸ்வரி வினாடி வினா போட்டியை நடத்தினார்.
பள்ளி மாணவிகளின் ஆப்பரேஷன் சிந்துார் நாடகம் நடத்தினர். ஆசிரியைகள் கவிதா, யாழினி உட்பட பலர் பங்கேற்றனர்.