/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மளிகைக் கடையில் குட்கா பறிமுதல்
/
மளிகைக் கடையில் குட்கா பறிமுதல்
ADDED : மார் 16, 2024 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் அருகே மளிகைக்கடையில் பதுக்கி வைக்கப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிந்தனர்.
ஆரோவில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் குயிலாப்பாளையத்தில் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ராமகிருஷ்ணன் மனைவி புனிதவதி, 52; தனது பெட்டிக் கடையில் குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
உடன் 295 கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, புனிதவதி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

