/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி பூத் முகவர்களுடன் ஆய்வு
/
எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி பூத் முகவர்களுடன் ஆய்வு
எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி பூத் முகவர்களுடன் ஆய்வு
எஸ்.ஐ.ஆர்., திருத்தப்பணி பூத் முகவர்களுடன் ஆய்வு
ADDED : நவ 14, 2025 11:25 PM

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நகராட்சி கே.கே., ரோடு, கந்தசாமி லே அவுட், ரங்கநாதன் சாலை, பூந்தோட்டம், விராட்டிக்குப்பம் சாலை, வண்டிமேடு பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணியை ஓட்டுச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் மூலம் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஓட்டுச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை நடத்தி, ஒரு வாக்காளர் கூட விடுபடாமல் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
தி.மு.க., நகர செயலாளர் சக்கரை, துணைச் செயலாளர் புருஷோத்தமன், பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன், நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணி, நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் சண்முகம், ஜானிபாஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

