/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ரங்கபூபதி பள்ளியில் விளையாட்டு விழா
/
ரங்கபூபதி பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : நவ 14, 2025 11:22 PM

செஞ்சி: செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
கல்விக் குழும தாளாளர், வழக்கறிஞர் ரங்கபூபதி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
செயலாளர் ஸ்ரீபதி, இயக்குனர் சாந்தி பூபதி, பள்ளி இயக்குநர் சரண்யா ஸ்ரீபதி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ராபியா வரவேற்றார்.
விழாவில், மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ரிலே ஓட்டம், கயிறு இழுத்தல் உட்பட பல்வேறு விளையாட்டு போட்டிகளும், பெற்றோர்களுக்கான சிறப்பு விளையாட்டுப் போட்டிகளும் நடந்தது.
ஆசிரியர்கள் கீதா, மனோகரி, இந்திரா காந்தி தொகுத்து வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.

