விஸ்வகர்ம தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
விஸ்வகர்ம தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா
UPDATED : ஜூலை 07, 2026 03:47 PM
ADDED : ஜூலை 07, 2026 03:20 PM
விழுப்புரம்: விழுப்புரம் நகர விஸ்வகர்ம பொன், வெள்ளி ஆபரணத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்றனர்.
நிகழ்ச்சிக்கு, இஷ்டலிங்கம் தலைமை தாங்கினார். சங்க தலைவர் ரமேஷ், சேகர் முன்னிலை வகித்தனர். வீரமணி வரவேற்றார். சங்கத்தின் 2026-2029ம் ஆண்டுக்கான தலைவர் ஆதவன் முத்து, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் ரமேஷ், ஆலோசகர் உமாபதி, துணைத் தலைவர்கள் சிவசங்கர், வீரமணி, துணைச் செயலாளர்கள் ரவிக்குமார், முருகானந்தம் பதவியேற்றனர். செயலாளர் வெங்கடேசன் அறிமுக உரையாற்றினார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் நகர் மன்ற தலைவர் ஜனகராஜ், அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பசுபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். அ.தி.மு.க., நகர செயலாளர்கள் ராமதாஸ், செங்குட்டுவன், தே.மு.தி.க., நகர செயலாளர் மணிகண்டன், வழக்கறிஞர் மனோ, சீனுவாசன், த.வெ.க., சேரமான் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
