/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநாடு
/
கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநாடு
ADDED : நவ 13, 2025 09:06 PM

விழுப்புரம்: தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் விழுப்புரத்தில் மாநாடு நடந்தது.
மாநில தலைவர் வாசு தலைமை தாங்கினார். சிறுபாக்கம் திருநாவுக்கரசர் திருமடம் தங்கதுரை சுவாமிகள் ஆசியுரை வழங்கினார். மாநில பொருளாளர் சுந்தரம், புருஷோத்தமன், மாவட்ட பொறுப்பாளர் துரைகண் ணு, கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரேசன், ஆலோசனைக்குழு தலைவர் சந்திரன், ஒன்றிய தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர்கள் பழனி, சுப்ரமணியம், அசோக் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருகால பூஜை நடக்கும் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு துறை ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது, நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், முரளிகிருஷ்ணன், விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

