/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பில் விழுப்புரம் போலீசார்
/
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பில் விழுப்புரம் போலீசார்
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பில் விழுப்புரம் போலீசார்
திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பில் விழுப்புரம் போலீசார்
ADDED : டிச 02, 2025 05:38 AM
விழுப்புரம்: திருவண்ணாமலை தீப திருவிழா பாதுகாப்பு பணியில் ஈடுபட விழுப்புரம் மாவட்ட போலீசார் 300 பே ர் புறப்பட்டு சென்றனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், நாளை 3ம் தேதி கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, கோவில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து, வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.
இதில், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட விழுப்புரம் எஸ்.பி., சரவணன் தலை மையில் ஒரு ஏ.டி.எஸ்.பி., 5 டி.எஸ்.பி.,க்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 300 போலீசார் திருவண்ணா மலைக்கு புறப்பட்டு சென்றனர்.