ADDED : ஜூலை 08, 2026 02:34 AM

அ நிறம் | அளவு
விழுப்புரம்: விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் துணைச் சேர்மன் தலைமையில் அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பங்கேற்றார்.
முன்னதாக, சுற்றுலா மாளிகைக்கு வந்த அமைச்சர் ஆனந்திற்கு, விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி முன்னாள் துணை சேர்மன் வண்டிமேடு சக்திவேல், நினைவு பரிசாக விநாயகர் சிலை கொடுத்து வரவேற்பு அளித்தார். கண்ணன், கோகுல்ராஜ், பன்னீர், சரவணன் உட்பட பலர் உடனிருந்தனர்.
