/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வறண்ட நிலையில் அய்யனார் கோயில் ஆறு--
/
வறண்ட நிலையில் அய்யனார் கோயில் ஆறு--
ADDED : ஏப் 28, 2024 06:14 AM

ராஜபாளையம், ; ராஜபாளையம் பகுதியில் கோடை மழை இல்லாததால் அய்யனார் கோவில் ஆறு வறண்ட நிலையில் பாறைகளுடன் காட்சியளிக்கிறது. இதனால் விடுமுறையில் சுற்றுலா பயணிகள் தண்ணீர் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
ராஜபாளையம் நகர்பகுதி மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் அய்யனார் கோவில் ஆறு அடிவாரப் பகுதியை ஒட்டி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சாகுபடி பரப்பில் நெல், வாழை, தென்னை, மா விவசாயத்திற்கு ஆதாரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மூன்று மாதங்களாக கோடை மழை பொய்த்ததின் காரணமாக அய்யனார் கோவில் ஆறு வறண்ட நிலையில் பாறைகளுடன் காட்சியளிக்கிறது.
தற்போது பள்ளி கல்லுாரி விடுமுறையினால் குடும்பத்தினருடன் பல்வேறு பகுதியில் இருந்து வெயில் காலத்தில் ஆற்றில் நீராடி மகிழ்வதற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
கடந்த வாரம் மலையில் பெய்த மழை குடிநீர் அத்தியாவசியத்தை கருதி நீர் தேக்கத்திற்கு திருப்பி விடப்படுவதால் ஆறு வறண்டு காணப்படுகிறது.
விடுமுறை காலத்தை ஆற்றில் நீராடி மகிழ்வதற்காக சுற்றி வரும் மாணவர்கள், விவசாயிகள் கோடை மழையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

