தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா தேரோட்டம்

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா தேரோட்டம்

நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா தேரோட்டம்


ADDED : ஜூலை 03, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி, ஜூலை 4-

சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.

108 திவ்ய தேசத்தில் ஒன்றான நின்ற நாராயண பெருமாள் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூன் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமிகள் சிம்ம, யானை, சேஷ உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா நடந்தது. 9 ம் நாள் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நின்ற நாராயண பெருமாள், செங்கமலத்தாயார் எழுந்தருள பக்தர்கள் கோவிந்தா கோபாலா என்ற பக்தி கோஷம் முழங்கியபடி தேரை இழுத்து வழிபட்டனர். பெண் பக்தர்கள் பஜனை பாடியும், கோலாட்டம் ஆடியும் வந்தனர். தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. தொடர்ந்து திருவிழா மூன்று நாட்களுக்குப் பின்பு புஷ்ப யாகத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை நின்ற நாராயண பெருமாள் கோயில் ததியாராதனை டிரஸ்ட் நிர்வாகிகள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us