/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் பணி நியமன ஆணை வழங்கும் விழா
/
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் பணி நியமன ஆணை வழங்கும் விழா
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் பணி நியமன ஆணை வழங்கும் விழா
பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் பணி நியமன ஆணை வழங்கும் விழா
ADDED : ஏப் 28, 2024 06:18 AM

சிவகாசி : சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்வி குழுமங்களின் மாணவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது.
இயக்குனர்கள் அருண்குமார் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தனர். பி. எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி காசி ராமன் வேலைவாய்ப்பு ஆண்டு அறிக்கை வாசித்தார்.
எச்.பி., நிறுவனத்தின் பல்கலை பணி அமர்த்தல் பிரிவு தலைவர் பிரதீப், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். பன்னாட்டு நிறுவனங்களான சோகோ, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.பி., அசெண்டர் ஸ்மார்ட் டிவி, சிர்மா, ஹார் டெக்னாலஜி டெக் மகிந்திரா, உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய 1380 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பி.எஸ்.ஆர்.ஆர்., பொறியியல் கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் பி.எஸ்.ஆர்., கலை , அறிவியல் கல்லுாரி முதல்வர் பாக்கிய சீமா, பி.எஸ்.ஆர்., பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி நிர்வாகம், பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை ஒருங்கிணைப்பாளர்கள் காசிராமன், சுதாகர் செய்தனர்.

