/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் திறப்பு
/
போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் திறப்பு
ADDED : பிப் 28, 2025 07:16 AM
விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் கலங்கரை' ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை காணொலியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
தமிழக அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் 25 “கலங்கரை” ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையங்கள் ரூ.15.81 கோடியில் கட்டப்பட்டது. இவற்றை சென்னையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கணொலியில் திறந்து வைத்தார்.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை வளாகத்தில் நடந்த திறப்பு விழாவில் கலெக்டர் ஜெயசீலன், தென்காசி எம்.பி., ராணி, எம்.எல்.ஏ., சீனிவாசன், டீன் ஜெயசிங், கல்லுாரி துணை முதல்வர் அனிதா, நகராட்சி தலைவர் மாதவன், தி.மு.க., நகரச் செயலாளர் தனபாலன், கவுன்சிலர் மதிவேந்தன், டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

