/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சித்தா உள்நோயாளிகள் பிரிவு துவக்கம்
/
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சித்தா உள்நோயாளிகள் பிரிவு துவக்கம்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சித்தா உள்நோயாளிகள் பிரிவு துவக்கம்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் சித்தா உள்நோயாளிகள் பிரிவு துவக்கம்
ADDED : ஜூலை 25, 2024 11:59 PM

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சித்த மருத்துவத்தில் 10 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவப் பிரிவிற்கு சிசிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. தினமும் ஆண்கள், பெண்கள் என வெளிநோயாளிகள் 130 பேர் வந்து செல்கின்றனர்.
மேலும் வாதநோய், தோல்நோய்கள், குழந்தையின்மை, மது, புகை மறுவாழ்வு சிகிச்சை, மாதவிலக்கு, மூட்டு வலி, முடக்குவாதம் சிகிச்சை, சர்க்கரை சத்து, ரத்தகொதிப்பு, கர்ப்பப்பை புற்றுநோய் உள்பட பல பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் சத்தியசீலன், காஞ்சனா தேவி சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
ஆனால் படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு இல்லாமல் இருந்ததால் நோயாளிகளை உள்நோயாளியாக அனுமதித்து தேவையான சிகிச்சைகளை அளிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது சித்த மருத்துவ பிரிவில் பத்து படுக்கை வசதிகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்களுக்கு 6, பெண்களுக்கு 4 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் நாள்பட்ட நோய்களுக்கு நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று குணமடைய முடியும். மேலும் வெளி நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் வர்ம சிகிச்சை, தொக்கணம், எண்ணெய் குளியல், மெழுகு சிகிச்சை அளிக்கப்படுகிறது என மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கீதா தெரிவித்தார்.

