/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிரதமர் கூறியதை திரித்து கூறும் காங்கிரஸ் பா.ஜ., மாவட்ட தலைவர் பேட்டி
/
பிரதமர் கூறியதை திரித்து கூறும் காங்கிரஸ் பா.ஜ., மாவட்ட தலைவர் பேட்டி
பிரதமர் கூறியதை திரித்து கூறும் காங்கிரஸ் பா.ஜ., மாவட்ட தலைவர் பேட்டி
பிரதமர் கூறியதை திரித்து கூறும் காங்கிரஸ் பா.ஜ., மாவட்ட தலைவர் பேட்டி
ADDED : ஏப் 28, 2024 06:03 AM
விருதுநகர் : காங். கட்சி தேர்தல் அறிக்கையில் இருப்பதையே பிரதமர் கூறி உள்ளார். அதை காங். கட்சி திரித்து பொய்யாக பரப்பி வருகிறது,” என விருதுநகரில் பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: நான்கு நாட்களுக்கு முன் ராஜஸ்தானில் காங். கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் மோடி சில விஷயங்களை வெளிப்படுத்தினார்.
அதை காங். கட்சி திரித்து பொய்யாக பரப்பி வருகிறது. காங். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் ஜாதி வாரி, பொருளாதார, நிறுவன ரீதியாக கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று காங்., எம்.பி., ராகுல் மார்ச் 16ல் பேசி உள்ளார். ஏப். 6ல் மீண்டும் மகாராஷ்டிராவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கட்சியின் வெளிநாடு பிரிவு தலைவர் சாம் பிரட்டோடா என்பவரும், அமெரிக்காவில் இருக்கும் ஒரு சட்டத்தை இங்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது என்று அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அதை மேற்கோள் காட்டி தான் பிரதமர் பேசி உள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு தவறில்லை. சொத்துக்கள், பொருளாதார ரீதியாக கணக்கெடுத்து மற்றவர்களுக்கு பிரித்து கொடுக்கும் செயல்பாட்டை காங். கட்சி முன்னெடுத்து செய்ய போகிறது அதற்கான வெளிப்பாடு தான் தேர்தல் அறிக்கை என பிரதமர் சுட்டி காட்டி உள்ளார்.
இது தான் உண்மை. திருமங்கலத்தில் போஸ்டர் ஒட்டிய தனிநபர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தான் எதிர்ப்பு ஓட்டிஉள்ளார்.எங்கள் கட்சி சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்படும், என்றார்.

