ADDED : ஜூலை 03, 2026 05:01 PM
அருப்புக்கோட்டை, ஜூலை 4-
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில் குடிநீர் கேட்டு பெண்கள் குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்த கொத்தனார் காலனியில் 7 மாதமாக தண்ணீர் வரவில்லை. ஊராட்சியில் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. மக்கள் தண்ணீர் கிடைக்காமல் குடங்களுடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீருக்காக வெகு தூரம் சென்று அடிகுழாயில் அடித்து குடிநீர் எடுத்து வருவதாகவும், அடிகுழாயும் பழுதாகிவிட்டதால் தண்ணீர் கிடைக்காமல் அலைவதாகவும் மக்கள் புகார் கூறினர்.
நேற்று காலையில் 10 மணிக்கு இப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். புதிய போர்வெல் அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக ஊராட்சி செயலர் கந்தன் கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.
____
படம் உள்ளது
