/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரேஷன் கடை இடமாற்றம் மக்கள் எதிர்ப்பு
/
ரேஷன் கடை இடமாற்றம் மக்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 27, 2024 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார்: சாத்துார் அருகே சின்னக் கொல்லப்பட்டியில் தெற்கூரில் இருந்து ரேஷன் கடையை சின்னக் ெகால்லப்பட்டி இடம் மாற்றம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தெற்கூரியில் ரேஷன் கடை இருந்த கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து சின்னக் கொல்லப்பட்டியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
நேற்று முதல் புதிய கட்டடத்தில் ரேஷன் கடை ெசயல்படத் துவங்கியது.
தாங்கள் நீண்டதூரம் சென்று பொருட்கள் வாங்க முடியாது, ரேஷன் கடையை இடமாற்றம் செய்யக் கூடாது எனக் கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை தெற்கூர் மக்கள் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரசம் செய்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

