/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சுக்கிரவார்பட்டியில் இரவில் தொடரும் மின்தடை
/
சுக்கிரவார்பட்டியில் இரவில் தொடரும் மின்தடை
ADDED : ஏப் 28, 2024 06:04 AM
சிவகாசி : சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டியில் ஒரு மாதமாக இரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி அதிவேகம் பட்டியில் 2000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஒரு மாதமாக இரவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால் மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
கோடை வெயிலால் சிரமப்படும் நிலையில் இரவில் ஏற்படும் மின்தடையால் மக்கள் மின்விசிறிகளை இயக்க முடியவில்லை. இதனால் குழந்தைகள், பெரியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தவிர இப்பகுதியில் பகலிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. எனவே தங்கு தடை இன்றி சீரான மின்சாரம் விநியோகம் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மகாலிங்கம், அதிவீரன்பட்டி, வெயிலின் தாக்கத்தால் மின்விசிறிகளை இயக்கியும் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு வெப்பமாக உள்ளது. இந்நிலையில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பெரிதும் அவதிப்பட நேரிடுகிறது. இதுகுறித்து மின் துறையினரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

