ADDED : மார் 20, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் லோக்சபா தேர்தல் குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டம் டி.எஸ்.பி., பவித்ரா தலைமையில் நடந்தது.
இதில் தேர்தல் பொதுக்கூட்டம், வேட்பாளர் பிரசாரங்கள் குறித்து கட்சியினருக்கு இருந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. விதிமுறைகள், பணப்பட்டுவாடா செய்வது குறித்த தகவல்களை தெரிவிக்கும் நபர்களின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதில் இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ஜாஸ்மின் மும்தாஜ், ஜெயந்தி, பொன்மீனா, சிவசக்தி ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., காங்., இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கம்யூ., வி.சி.க., ம.நீ.ம., நா.த.க., உள்பட பல கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.

