ADDED : ஜூலை 02, 2026 12:29 AM

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேது நாராயண பெருமாள் கோயிலில் 3 நாள் பிரம்மோற்ஸவம் நேற்று முதல் துவங்கியது.
இதை முன்னிட்டு நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு பகவத் அனுக்ஞை, வாசுதேவ புண்யாக வாசனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, திவ்ய பரந்த பாராயணத்துடன் விழா துவங்கியது.
நேற்று காலை 6:00 மணிக்கு மேல் ரக்ஷா பந்தனம், யாகசாலை பிரவேசம், கும்ப மண்டல பிம்ப திருவாராதனம், அக்னி பிரதிஷ்டை, பூர்ணா ஹூதி நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சேது நாராயண பெருமாள் புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் தரி சனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் யாகசாலை பூஜையும், சேச வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடந்தது.
இன்று (ஜூலை 2) மதியம் 3:00 மணிக்கு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு யாகசாலை பூஜைகள், அனுமந்த வாகன புறப்பாடு, நாளை (ஜூலை 3) அதிகாலை 5:30 மணிக்கு கருட சேவை, பின்னர் தீர்த்தவாரி நடக்கிறது.
