/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு..
/
கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு..
கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு..
கல்வித்துறை அலுவலர்களிடம் பணம் பிடிபட்ட வழக்கு..
ADDED : நவ 14, 2025 03:59 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் முதன்மைக் கல்வி அலுவலர் ராமன், அவரது நேர்முக உதவியாளர் செல்வராஜா, இளநிலை உதவியாளர் சாணக்கியன் ஆகியோரிடம் இருந்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.3 லட்சத்து 13 ஆயிரம் பணம் கைப்பற்றிய வழக்கை திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் செய்து ஸ்ரீவில்லிபுத்துார் முதன்மை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 நவ.7ல் விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்ததில் அப்போதய நேர்முக உதவியாளர் செல்வராஜாவிடமிருந்து ரூ.13 ஆயிரம், முதன்மை கல்வி அலுவலர் ராமன் வீட்டிலிருந்து ரூ.3 லட்சம் கணக்கில் வராத பணமாக கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக 3 பேர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது.
இந்த பணம் கலெக்டரின் அனுமதி இன்றி அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகிகளிடம் இருந்து புத்தகத் திருவிழா நன்கொடை என்ற பெயரில் லஞ்சமாக பெறப்பட்டதாக நிரூபிக்க நேரடி ஆவணங்களோ, சாட்சிகளோ இல்லாததால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என விசாரணை அதிகாரி பரிந்துரையின் பேரில் பள்ளி கல்வித்துறை செயலர் உத்தர விட்டிருந்தார்.
இந்த உத்தரவை ஏற்று, இவ்வழக்கினை திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாயத்திற்கு மாற்றம் செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

