/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு மருத்துவமனைகளில் டிச.12ல் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்'
/
அரசு மருத்துவமனைகளில் டிச.12ல் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்'
அரசு மருத்துவமனைகளில் டிச.12ல் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்'
அரசு மருத்துவமனைகளில் டிச.12ல் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்'
ADDED : டிச 07, 2025 04:57 AM
விருதுநகர்: அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்' டிச.12ல் வார்டுகள், ஆய்வகம், வளாகம் உட்பட அனைத்து பகுதிகளும் முழுவதும் சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் மருத்துவப்பணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் அனைத்து அரசு ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், தாலுகா, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் துாய்மை பணியை ஒப்பந்த ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இவர்கள் தினசரி வார்டுகள், ஆய்வகம், வளாகத்தின் துாய்மை பணிகளை செய்து வந்தாலும் தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் காலக்கெடு முடிந்து 6 மாதங்களுக்கு முன் வேறு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதால் அரசு மருத்துவமனைகளிலும் துாய்மை பணிக்கான பணியாளர் பற்றாக்குறை உள்ளது.
கூடுதல் துாய்மை பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவனை நிர்வாகங்கள் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.
இந்நிலையில் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்' என்ற திட்டத்தை தமிழக அரசு டிச.12ல் மாநிலம் முழுவதும் செயல்படுத்தவுள்ளது. ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகளையும் டிச.12ல் மொத்தமாக சுத்தம் செய்வதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வார்டுகள், ஆய்வகம், வெளி நோயாளிகள் பிரிவு, வளாகம் உட்பட அனைத்து இடங்களும் சுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
துாய்மை பணியாளர் பற்றாக்குறையால் அன்றாட பணிகளுக்கு ஆட்கள் இல்லாத நிலையில் 'கிளீன் தமிழ்நாடு மிஷன்' திட்டத்தால் மருத்துவப்பணிகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

