/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
30 அடி ரோட்டின் நடுவில் மின் கம்பங்கள்
/
30 அடி ரோட்டின் நடுவில் மின் கம்பங்கள்
ADDED : டிச 07, 2025 08:42 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் 30 அடி ரோட்டில் நடுவில் மின் கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர் இருப்பதால் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.
அருப்புக்கோட்டை - பாலையம்பட்டி மதுரை ரோடு அருகில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், டி.எஸ்.பி., அலுவலகம், மகளிர், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தேசிய வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இவற்றிற்கு எதிரே மேற்குப் பகுதியில் 30 அடி ரோடு உள்ளது. ரோட்டின் இருபுறமும் 20 க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த ரோட்டை பயன்படுத்தி தான் தெருக்களுக்குள் செல்ல முடியும். இந்த ரோட்டின் நடுவில் 20 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மரை மின்வாரியத்தினர் அமைத்துள்ளனர்.
இவை அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், இந்த பகுதியில் அதிக குடியிருப்புகள் வந்துவிட்டது. நடுவில் மின்கம்பங்கள் இருப்பதால் ரோட்டில் வந்து செல்ல வாகனங்கள் சிரமப்படுகின்றனர். கனரக வாகனங்கள் வந்து செல்ல முடியவில்லை. சில சமயங்களில் மின் கம்பங்களின் மீது மோதி விபத்து ஏற்படுகிறது. அகலமான ரோடாக இருந்தும் வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலைமையில் இருக்கிறது.
மின்வாரியத்தினர் மின் கம்பங்களை ரோடு ஓரங்களில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

