தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கடைகளில் ஆவின் நெய் வினியோகம் இல்லை: சுவீட்ஸ் வந்தும் பற்றாக்குறையால் பாதிப்பு

கடைகளில் ஆவின் நெய் வினியோகம் இல்லை: சுவீட்ஸ் வந்தும் பற்றாக்குறையால் பாதிப்பு

கடைகளில் ஆவின் நெய் வினியோகம் இல்லை: சுவீட்ஸ் வந்தும் பற்றாக்குறையால் பாதிப்பு

1


UPDATED : நவ 05, 2026 01:17 AM

ADDED : நவ 04, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 01:17 AM ADDED : நவ 04, 2026 08:30 PM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் ஆவின் நெய் விநியோகம் இல்லை. தீபாவளி நெருங்கி உள்ளதால் ஆவின் நெய், சுவீட்ஸ் எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சுவீட்ஸ் வந்தும் பற்றாக்குறையாக உள்ளதாக கடைக்காரர்கள் புலம்புகின்றனர்.

தீபாவளி என்றாலே பட்டாசு, இனிப்பு வகைகளோடு புத்தாடை அணிந்து குடும்பங்களோடு கொண்டாடுவது தான். நாளுக்கு நாள் விலைவாசி ஏறி வரும் சூழலில் மக்கள் பலகார வகைகளை கடைகளில் வாங்குவதை விடுத்து தாங்களே வீட்டில் செய்ய முனைப்பு காட்டுகின்றனர் அல்லது ஆவினில் வரும் சற்று விலை குறைவான சுவீட்ஸ் வகைகளை வாங்கிச் செல்கின்றனர்.

அதிகம் விற்பனையாகும் ஆவின் நெய் 200 மி.லி., ரூ.20 அதிகரித்து ரூ.180க்கு விற்கப்படுகிறது. வெளியே மற்ற நெய் வகைகளும் ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. ஆவின் சுவீட்ஸ் ரூ.120 முதல் 200 வரை எடைக்கு ஏற்ப விற்கப்படுகிறது. முன்பெல்லாம் தீபாவளி சிறப்பு விற்பனையாக ஆவின் சுவீட்ஸ் வகைகள், நெய் வகைகள் போன்றவை தொழிலாளர்களுக்கு அமைப்பு சாரா நிறுவனங்கள் வாங்கி போனஸ் உடன் வழங்கும்.

ஆனால் இப்போது ஆவின் நலிவடைந்து அதன் பொருட்கள் அதன் பார்லர்களில் மட்டுமல்ல அதிகாரப்பூர்வ ஹைடெக் பார்லர்களில் கூட நிறைய தயாரிப்புகள் கிடைப்பதில்லை. தற்போது பல கடைகள், பார்லர்களின் ஆவின் நெய் இன்னும் வரவில்லை. இதனால் ஆவின் நெய் கேட்டு பலர் ஏமாற்றத்தில் உள்ளனர். அதே போல் சுவீட்ஸ் வகைகளும் குறைந்த அளவே வந்துள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு போதாது என விற்பனையாளர்கள் குமுறுகின்றனர்.

ஹைடெக் பார்லர்கள் தமிழக அளவில் செயல்படாமல் போவதற்கு மின் கட்டண உயர்வு, ஊரகப்பகுதிகளில் இருப்பதால் போதிய விற்பனை இல்லாத சூழல், லாபம் குறைவு போன்ற காரணங்கள் உள்ளன. ஏற்கனவே அனுமதி பெற்று நகர்ப்பகுதிகளில் இயங்கும் பல ஆவின் பெட்டிகளில் ஆவின் பொருட்களே இல்லை. இந்நிலையில் ஆவின் பொருட்கள், தயாரிப்புகள் மட்டும் கிடைக்கும் ஹைடெக் பார்லர் செயல்படாமல் இருப்பது பாதிப்பை தான் தரும்.

எனவே மாவட்ட நிர்வாகம் ஆவின் நிர்வாகத்தின் தயாரிப்புகள் அனைத்து கடைகளில் கிடைப்பதையும், தற்போது தீபாவளி நேரத்தில் நெய், சுவீட்ஸ்கள் அதிகமாக இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us