/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அமைச்சர் உத்தரவிட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்; டாஸ்மாக் கடை இடமாற்றத்தில்...

ADDED : டிச 02, 2025 05:06 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் கோயில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்ய அமைச்சர் அறிவுறுத்தியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
அருப்புக்கோட்டையில் மதுரை ரோடு அருகில் அமுதலிங்கேஸ்வரர் கோயில், ஆழாக்கு அரிசி விநாயகர் கோயில், மாரியம்மன் கோயில், மசூதி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த ரோட்டில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், மக்களும் வந்து செல்வர். மாணவர்கள் இந்த வழியாகத்தான் பள்ளிகளுக்கு செல்வர். கோயில் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் தினமும் குடிமகன்களின் அட்டகாசமும், போக்குவரத்திற்கு இடையூறும் ஏற்படுகிறது. இது குறித்தான செய்தி தினமலர் நாளிதழில் வந்தது.
செய்தியைப் படித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் விரைவில் கடை வேறிடத்திற்கு இடம் மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். அமைச்சர் கூறி ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகியும் அதிகாரிகள் கடையை இடம் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் ரவிச்சந்திரன்: டாஸ்மாக் கடைக்கு வேறு இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் இடம் மாற்றப்படும். என்றார்.