/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுரை - துாத்துக்குடி நான்கு வழி சாலையில் பழைய சுங்க கட்டணம் வசூலிப்பு

ADDED : ஏப் 01, 2025 05:43 AM
காரியாபட்டி: மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் செப்.1ல் உயர்த்தப்பட உள்ளது. அதுவரை பழைய கட்டணம் செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் 40 சுங்கச்சாவடிகளுக்கு அதிகாலை முதல் சுங்க கட்டணம் ரூ. 5 முதல் 15 வரை உயர்த்தப்படுகிறது. 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இல்லை. பழைய கட்டணமே வசூலிக்கப்பட உள்ளது. அதில் மதுரை -தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் உள்ள மதுரை எலியார்பத்தி, தூத்துக்குடி பி.பாண்டியபுரம் சுங்கச்சாவடியில் செப். 1ல் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
சுங்கச்சாவடி அதிகாரி கூறியதாவது: 78 சுங்கச்சாவடிகளில் முதலில் 40 சுங்கச்சாவடிகளுக்கு ஏப்.1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும். மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளுக்கு செப். 1ல் உயர்த்தப்படும். இது தான் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.