/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி *விபத்திற்கு முன் அப்புறப்படுத்த எதிர்பார்ப்பு இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி

ADDED : டிச 07, 2025 08:36 AM

நரிக்குடி: இசலியில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலைத் தொட்டி உள்ளதால், விபத்திற்கு முன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
நரிக்குடி இசலியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய உள்ளூரில் ஆள்துளை கிணறு அமைத்து, 15 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டி அதில் ஏற்றி சப்ளை செய்து வருகின்றனர்.
நாளடைவில் தொட்டியில் விரிசல் ஏற்பட்டு நீர் கசிந்து வருகிறது. தூண்கள் சேதமடைந்து கம்பிகள் தெரிகின்றன.
தற்போது வரை மேல்நிலைத் தொட்டி செயல்பாட்டில் இருந்து வருகிறது.
முழு அளவில் நீர் ஏற்றும் போது எடை தாங்காமல் பில்லர் உடைந்து, தொட்டி இடிந்து விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது.
அப்பகுதியில் மக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். குமிழாங்குளம் செல்லும் ரோட்டோரத்தில் உள்ளதால் அவ் வழியாக செல்வோர் தயக்கமுடன் சென்று வருகின்றனர்.
விபத்திற்கு முன் மேல்நிலைத் தொட்டியை அப்புறப்படுத்தி, புதிய தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.