/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம்
/
விருதுநகரில் மக்கள் குறைதீர் கூட்டம்
ADDED : டிச 09, 2025 06:25 AM
விருதுநகர்: விருதுநகரில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் சுகபுத்ரா தலைமையில் நடந்தது.
இதில்இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலை வாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நல உதவித்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகள், மூத்தகுடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்குச் சென்று, கலெக்டர் மனுக்களை பெற்றுக் கொண்டார். இம்மனுக்களை கலெக்டர், சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் காளிமுத்து, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிர்தவுஸ் பாத்திமா, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

