பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் ஜோதி ஓட்டம்
பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா பிறந்தநாள் ஜோதி ஓட்டம்
ADDED : ஜூலை 04, 2026 11:31 PM

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் மறைந்த ராம்கோ முன்னாள் சேர்மன் பி. ஆர் ராமசுப்பிரமணியராஜா 91வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ராஜபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்த கீர்த்தனாஞ்சலி மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் ராம்கோ சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா, மனைவி நிர்மலா ராஜா, அவரது மகன் அபிநவ் ராமசுப்பிரமணிய ராஜா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
அதன் பின் அபிநவ வித்யாதீர்த்த பாரதீ வேத பாடசாலையில் பி.ஆர்.ஆர் சிலைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு நினைவு ஜோதி ஓட்டத்தை ராம்கோ சேர்மன் தொடங்கி வைத்தார்.
நினைவு ஜோதி சாரதாம்பாள் கோயில் ராம மந்திரம் இல்லம் வழியே சென்று ராஜபாளையம் மில்சில் நிறைவடைந்தது. அங்கு நினைவு ஜோதி ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
நகரின் பல்வேறு பகுதிகளில் அவரது உருவ படத்திற்கு வியாபாரிகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாலை 6:00 மணிக்கு திருப்பதி தேவஸ்தான மண்டபத்தில் திரைப்பட பாடல்கள் உன்னி கிருஷ்ணன், உத்ரா பங்கேற்கும் கர்நாடக இசை நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.
