/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவு நீர் கண்மாய், சேதமான பள்ளி சுவர்
/
கழிவு நீர் கண்மாய், சேதமான பள்ளி சுவர்
ADDED : ஏப் 01, 2025 05:40 AM

காரியாபட்டி: மேல துலுக்கன்குளத்தில் நடுநிலைப் பள்ளி சுற்றுச் சுவர் கீழே விழும் நிலையில் உள்ளது. மந்தை கண்மாயில் கழிவு நீர் தேங்கி, குப்பை நிறைந்து துர்நாற்றம் வீசுவது, பராமரிப்பின்றி கிடக்கும் நூலகத்தால் வாசகர்கள் அவதி, பெருமாள் கோயில் பராமரிப்பின்றி கிடப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காரியாபட்டி நந்திக்குண்டு ஊராட்சி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
காரியாபட்டி நந்திக்குண்டு ஊராட்சியில் மேல, கீழ துலுக்கன்குளம் கிராமங்கள் உள்ளன. நந்திக்குண்டு கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுகாதார வளாகம் சேதமடைந்து பயன்பாடு இன்றி கிடக்கிறது. அரசு நிதி வீணடிக்கப்பட்டு உள்ளது. போதிய வாறுகால் வசதி இல்லாததால் கழிவு நீர் வீதியில் தேங்குவதால், சுகாதாரக் கேடாக உள்ளது.
மேல துலுக்கன்குளத்தில் மந்தை கண்மாயில் கழிவுநீர் தேங்கி, குப்பை நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. நூலகம் பராமரிப்பின்றி கிடக்கிறது. வாசகர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குளியல் தொட்டி இடிந்து விழும் அச்சத்தில் உள்ளனர். அதே போல் நடுநிலைப் பள்ளியில் உள்ள சுற்றுச் சுவர் கீழே விழும் நிலையில் உள்ளது. ரோட்டோரத்தில் உள்ளதால், ஆட்கள், வாகனங்கள் மீது விழும் ஆபத்தான சூழ்நிலை உள்ளது. அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட பெருமாள் கோயில் பராமரிப்பின்றி கிடக்கிறது. பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
கீழதுலுக்கன்குளத்தில் ஊருணி அருகில் உள்ள தரை தள தொட்டி, குளியல் தொட்டி 2 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளன. உறிஞ்சி குழி சேதமடைந்துள்ளது. ரோடு மோசமாக உள்ளது.

