/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் 'ஷிப்ட்', 'ஆப்சென்ட்' சரிபார்ப்பு தீவிரம்
/
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் 'ஷிப்ட்', 'ஆப்சென்ட்' சரிபார்ப்பு தீவிரம்
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் 'ஷிப்ட்', 'ஆப்சென்ட்' சரிபார்ப்பு தீவிரம்
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் 'ஷிப்ட்', 'ஆப்சென்ட்' சரிபார்ப்பு தீவிரம்
ADDED : டிச 09, 2025 06:23 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் கணினி பதிவேற்றம் நுாறு சதவீதம் முடிந்துள்ள நிலையில் 'ஷிப்ட்', 'ஆப்சென்ட்' சரிபார்ப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நவ. 4ல் எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கியது. வாக்காளர் பட்டியலின் இந்த சிறப்பு தீவிரத் திருத்த பட்டியலில் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்ற எஸ்.ஐ.ஆர்., கணக்கெடுப்பு படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி வந்தனர். படிவம் வழங்கும் போது பலர் வீடு இடமாற்றம் காரணமாக 'ஷிப்ட்' என்றும், கண்டறிய முடியாத நிலையில் போனவர்களை 'ஆப்சென்ட்' என்றும் குறிப்பிட்டு அந்தந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களே படிவங்களை வைத்துள்ளனர்.
இந்நிலையில் நவ. இறுதியில் 98 சதவீத படிவங்கள் வழங்கப்பட்ட அதே நேரத்தில் 50 சதவீத கணினி பதிவேற்ற பணிகளும் நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படாதவர்களுக்கு வழங்குவதற்கும், மீதமுள்ள 50 சதவீதம் கணினி பதிவேற்றம் செய்யவும் மும்முரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வரை நுாறு சதவீதம் கணினி பதிவேற்றம் முடிந்தது. 'ஷிப்ட்', 'ஆப்சென்ட்' என குறிப்பிட்ட படிவங்களின் நிலை உண்மை தான என சரிபார்க்கும் பணி மீண்டும் நடந்து வருகிறது. காரணம், டிச. 11ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதில் ஒருவரது பெயரும் விடுபட்டு விடக்கூடாது என்பதற்காக மும்முரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின் மக்கள் அதில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு மட்டுமின்றி, பிழைகள், விவரங்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் தெரிந்து சரி செய்துக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

