/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
/
வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி முகாம்
ADDED : பிப் 09, 2025 11:50 PM
விருதுநகர்; தேசிய விலங்கு நோய் கட்டுபாட்டுத்திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோடை காலம் துவங்குவதற்கு முன் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம்.
கோழிகள், பண்ணைக்கோழிகள், வாத்துக்கள், வான்கோழிகளை வெள்ளை கழிச்சல் நோய் தாக்குகிறது. தீவனம் உண்ணாமை, சோர்ந்து போய் இருத்தல், வெள்ளை நிறத்தில் வயிற்றுப்போக்கு, நரம்பு தளர்ச்சியால் நடக்க இயலாமை ஆகியவை நோயின் அறிகுறிகளாக உள்ளன.
இதனால் அதனை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.இதனை தடுக்க பிறந்து எட்டு வாரத்திற்கு மேல் உள்ள கோழிகள், குஞ்சுகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இம்மாததிற்குள் துவங்கி, முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தேதி அறிவிக்கப்படும்.

