டோல்கேட் மறியலால் 20 கி.மீ., சுற்றிச்சென்ற வாகனங்கள்
டோல்கேட் மறியலால் 20 கி.மீ., சுற்றிச்சென்ற வாகனங்கள்
ADDED : ஜூலை 10, 2024 09:51 PM

திருமங்கலம்:திருமங்கலம் கப்பலுாரில் டோல்கேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து மறயில் நடந்ததால் வாகனங்கள் பல கி.மீ., சுற்றிச்சென்றன.
திருநெல்வேலியில் இருந்து வந்த வாகனங்களை கள்ளிக்குடியில் இருந்து டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி வழியாக மதுரைக்கும், கள்ளிக்குடி, காரியாபட்டி ரோட்டில் சென்று துாத்துக்குடி நான்கு வழி சாலை வழியாக மாட்டுத்தாவணிக்கும் போலீசார் திருப்பி விட்டனர்.
மதுரையில் இருந்து கப்பலுார் வழியாக செல்லும் வாகனங்களை சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலுக்கு பின் வழக்கம் போல் செல்ல போலீசார் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
திண்டுக்கல் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள் நாகமலை புதுக்கோட்டை, செக்கானூரணி உசிலம்பட்டி வழியாகவும், சில வாகனங்கள் கூத்தியார்குண்டு, எய்ம்ஸ் மருத்துவமனை ரோடு கரடிக்கல் வழியாகவும் திருப்பி விடப்பட்டன. இருப்பினும் காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. அதன் பின்னரே ஓரளவிற்கு நெரிசல் சீரானது. மறியலால் பெரும்பாலான வாகனங்கள் 20 முதல் 25 கி.மீ., வரை சுற்றிச் சென்றன.

