ADDED : ஏப் 28, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இயல்பைவிட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தட்பவெப்ப நிலை மாற்றத்தால், கோடை வெயில் தாக்கம் அதிகரித்து இருப்பதால், மனிதர்களுக்கு வெப்பம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, உடலியல் ரீதியான பாதிப்பு, மன அழுத்தம் மற்றும் உயிரிழப்பு ஏற்படலாம்.
எனவே, அனைத்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கோடைக்கால பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதுடன், வெயில் அதிகமாக இருக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
வெயில் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து, முகாம் அமைத்து, ஓ.ஆர்.எஸ்., என்ற உப்பு, சர்க்கரை குடிநீரை வழங்க வேண்டும். குடிநீரின் தரத்தையும் உறுதி செய்வது முக்கியம்.
செல்வவிநாயகம்
இயக்குனர்,
பொது சுகாதாரத்துறை

