ADDED : ஜூலை 26, 2024 09:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வழக்கம்போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும். ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தாண்டு விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும்.
இம்முறை, விநாயகர் சதுர்த்தியில் பங்கேற்குமாறு அவருக்கும் அழைப்பு விடுக்கப்படும்; அவரும் பங்கேற்க வேண்டும். பழநியில் இருப்பது முருகன் சிலை அல்ல; அது போகர் சிலை என, திமுக., தொண்டராக மாறி இருக்கும் 'சுகி சிவம்' கூறுகிறார். அவர் எப்போது இதை கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.
காடேஸ்வரா சுப்பிரமணியம்,
மாநிலத் தலைவர், ஹிந்து முன்னணி

