தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ பள்ளிகளுக்கான தடகள போட்டி வரும் 24ம் தேதி துவக்கம்

 பள்ளிகளுக்கான தடகள போட்டி வரும் 24ம் தேதி துவக்கம்

 பள்ளிகளுக்கான தடகள போட்டி வரும் 24ம் தேதி துவக்கம்


ADDED : ஜூலை 07, 2026 11:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 11:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநில அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டி, வரும் 24ம் தேதி மதுரையில் தொடங்க உள்ளது.

இதில் பங்கேற்க, அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ்நாடு தடகள சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ்நாடு தடகள சங்கம், வேலம்மாள் குளோபல் பள்ளியுடன் இணைந்து, பள்ளிகளுக்கு இடையிலான, முதலாவது தடகள போட்டி, மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில், வரும் 24ம் தேதி தொடங்கி, இரண்டு நாட்கள் நடக்க உள்ளது.

இதில், 500க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள், கலந்து கொள்ள உள்ளனர்.

போட்டியில் பங்கேற்கும்படி, தமிழ்நாடு தடகள சங்கம், அனைத்து பள்ளிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

இதில் வெற்றி பெறும் மாணவ - - மாணவியருக்கு, சான்றிதழ், பதக்கம், கோப்பை வழங்கப்படும். சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு, சிறப்பு பரிசு வழங்கப்படும்.

இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட தடகள சங்க செயலர் மோகன் பாபு கூறுகையில், ''தமிழகத்தில் பள்ளிகளுக்கிடையே அதிகாரப்பூர்வ தடகள போட்டி நடத்தப்படுவது இதுவே முதல் முறை,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us