பழநி முருகன் கோயிலில் பரணி தீபம்; இன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றுதல்
பழநி முருகன் கோயிலில் பரணி தீபம்; இன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றுதல்
ADDED : டிச 03, 2025 01:11 AM

பழநி: பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மகாதீபம், சொக்கப்பனை ஏற்றபட உள்ளது
பழநி முருகன் கோயில் திருக்கார்த்திகை தீப திருவிழா நவ. 27ல் காப்பு கட்டுதல் உடன் துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை ,சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை நடைபெற்றது.
நேற்று (டிச.2 ) மாலை 5:30 மணிக்கு சாயரட்சை பூஜையில் புனிதநீர் நிரப்பிய கலசபூஜை நடக்க மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
இன்று திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் விசேஷ பூஜைகளுடன் துவங்குகிறது. மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடக்கிறது. மதியம் 2:00 மணிக்கு குடமுழுக்கு அரங்க நுழைவாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
அதன்பின் மாலை 6:00 மணிக்கு சூழ்நிலைக்கேற்ப திறக்கப்பட்டு பக்தர்கள் கோயில் செல்ல அனுமதிக்கப்படுவர்.
மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை ,4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள யாகசாலை தீபாராதனை நடைபெறுகிறது . அதன்பின் கோயில் நான்கு மூலைகளில் தீபம் ஏற்ற 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறுகிறது.
திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடக்கிறது.

