கமிஷன், கரப்சன் இல்லாத ஆட்சி: முதல்வர் விஜய்க்கு வைகோ புகழாரம்
கமிஷன், கரப்சன் இல்லாத ஆட்சி: முதல்வர் விஜய்க்கு வைகோ புகழாரம்
ADDED : ஜூன் 17, 2026 05:50 PM

சென்னை: '' கமிஷன், கரப்சன் இல்லாத ஆட்சியாக தவெக அரசு உள்ளது,'' என மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறியுள்ளார்.
தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜயை, வைகோ சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த சந்திப்பின்போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மீண்டும் துவங்க அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தியதாக வைகோ நிருபர்களிடம் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: எனது பார்லிமென்ட் உரைகளை 6 பகுதிகளாக தொகுத்து இருக்கிறேன். இதனை ஆக.,4ம் தேதி டில்லியில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறேன். அதனை வெளியிட துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட அனுமதி கேட்கப்பட்டுள்ளது. முதல் பிரதியை முதல்வர் விஜய் பெற்றுக்கொள்ள அனுமதிகேட்டேன். அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார். விஜயுடனான சந்திப்பு நிறைவை தருகிறது.
கமிஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை.மக்கள் மனதை குளிர்விக்க விஷயம். கமிஷன், கரப்சன் இல்லாமல் விஜய் அரசு இயங்குகிறது என்பது எனது கருத்து. விஜய் எளிமையாக இயல்பாக வெளிப்படைத்தன்மையோடு இருக்கிறார். நல்லது நடந்தால் வரவேற்பேன் அல்லது நடந்தால எதிர்ப்பேன் இதுதுான் வைகோ.
மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் இடைத்தேர்தல் என்பது யூகம். இதற்கு பதில் சொல்ல இயலாது. வெள்ளை அறிக்கை வெள்ளையாக இருக்கிறது. திமுக கூட்டணியிலேயே நீடிப்போமா அல்லது தவெக கூட்டணிக்கு செல்வோமா என்பது குறித்து மதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு வைகோ கூறினார்.
