தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? ஸ்டாலின் கேள்வி

நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? ஸ்டாலின் கேள்வி

நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? ஸ்டாலின் கேள்வி

67


ADDED : ஜூன் 16, 2026 11:13 AM

Follow on GoogleFavourite on Google

67

ADDED : ஜூன் 16, 2026 11:13 AM


67
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும் நான் 6 மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை: சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன் என்று சீறிய முதல்வரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா? மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது? கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்? மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா? இல்லை திமுகவின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us