வெள்ள பாதிப்பு எதிரொலி; 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து; இதோ முழு விபரம்!
வெள்ள பாதிப்பு எதிரொலி; 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து; இதோ முழு விபரம்!
ADDED : டிச 02, 2024 06:59 AM

சென்னை: சென்னை- தென் மாவட்டங்களுக்கு இடையிலான 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. விக்கிரவாண்டி- முண்டியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலத்தில் அபாய அளவை தாண்டி தண்ணீர் செல்கிறது. பயணிகளின் பாதுகாப்பு கருதி, 5 தென் மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:
* வைகை எக்ஸ்பிரஸ் ரயில்,
* காரைக்குடி - சென்னை, எழும்பூர் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்
* மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்,
* சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்,
* சென்னை- மதுரை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்
அதேபோல், சென்னை- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- தாம்பரம் ரயில், புதுச்சேரி- சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.