கங்கைகொண்டான் தொழில் பூங்கா அரசிடம் அனுமதி கேட்கும் 'சிப்காட்'
கங்கைகொண்டான் தொழில் பூங்கா அரசிடம் அனுமதி கேட்கும் 'சிப்காட்'
ADDED : டிச 07, 2025 01:37 AM

சென்னை,திருநெல்வேலி கங்கை கொண்டானில் புதிய தொழில் பூங்கா அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், 'சிப்காட்' நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் துவங்கும் பெரிய நிறுவனங்கள் ஆலை அமைக்க வசதியாக, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் அமைக்கிறது.
இந்நிறுவனத்துக்கு, திருநெல்வேலி மாவட்டம், கங்கை கொண்டானில், 1,900 ஏக்கரில் தொழில் பூங்கா உள்ளது. அங்கு, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆலை அமைத்துள்ளன.
கங்கைகொண்டானில், 660 ஏக்கரில் புதிய தொழில் பூங்கா உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தற்போது, மத்திய சுற்றுச்சூழல் துறையிடம், 'சிப்காட்' நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது.
ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தில், 422 ஏக்கரில் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், தற்போது, சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

