ADDED : ஜூலை 03, 2026 01:03 AM

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,400 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாயும் அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,250 ரூபாய்க்கும், சவரன், 1,06,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை, தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் உயர்ந்து, 13,400 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,200 ரூபாய் அதிகரித்து, 1,07,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 250 ரூபாய்க்கு விற்பனையானது.
மாலையில் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 13,550 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 1,200 ரூபாய் உயர்ந்து, 1,08,400 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு, 2,400 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாயும் அதிகரித்துள்ளது.
